2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘சம்பந்தன் மௌனம் காப்பது ஏன்?’

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

“எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்தால், நாளைக்கே எமது பிரச்சினையைத் தீர்க்கமுடியும். எமது நிலைமை தொடர்பில் உரியவர்களிடம் கொண்டு சென்று தீர்வினை வழங்கமுடியும். ஆனால், ஏன் அவர் மௌனமாகவே உள்ளார் என்பது எங்களுக்கு புதிராகவுள்ளது” என, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆயிரம் தந்திகளை அனுப்பும் போராட்டம், இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனங்களை வழங்க மத்திய, மாகாண அரசாங்கங்களை வலியுறுத்தி, கடந்த 30 நாட்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

காந்தி பூங்காவில் இருந்து மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் வரையில் வேலையற்ற பட்டதாரி மாணவர்களின் பேரணி நடைபெற்றதுடன், பேரணியை தொடர்ந்து தபாலகத்தில் இருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இங்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது போராட்டம் தொடர்பில், விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எமது போராட்ட வடிவத்தினை மாற்றிப் போராடவேண்டிய நிலையேற்படும். அது எங்களுக்குப் பாதகமாக இருந்தாலும் எமது போராட்டம் தொடரும்.

"குப்பைகளில் வீசப்பட்ட குப்பைகளாக நாங்கள் உள்ளோம்.குப்பையென வீசப்பட்டுள்ள இந்த இளைஞர் சமுதாயத்தின் பலம், அவர்களுக்கு விளங்குவதில்லை.இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள், வீதியில் வீசப்பட்டுள்ளனர்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .