Suganthini Ratnam / 2015 நவம்பர் 26 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அகமட் அனாம்
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் காரியாலய வாடகை மற்றும் பதவி உயர்வு, சமுர்த்தி உத்தியோகத்தர்களில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான 300 ரூபாய் பிரயாணக் கொடுப்பனவு மற்றும் காகிதாதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ஜகத்குமார சுமித்திர ஆராய்ச்சி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்களை ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மேலும், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்திற்கு நிரந்தர ஊழியர்களாக சென்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் ஊழியர் சேமலாப நிதியில் 8 வீதத்தினை உடனடியா வழங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். மிகுதியான 12 வீதம் தொடர்பாக இது தொடர்பாக நீதிமன்றத்திலுள்ள வழக்கு முடிவடைந்தவுடன் அது தொடர்பான முடிவெடுக்கப்படும்' என்றார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பி.குணரெட்னம் மற்றும் சங்தக்தின் பொருளாளார் எம்.அன்வர், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எல்.ஐயூப்கான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago