Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கடந்த ஆயுத வன்முறைக் கலாச்சார காலத்தில் வாழ்ந்தது போன்ற அச்சம் தரும் சவால் நிறைந்த வாழ்க்கை முறை இப்பொழுது இல்லை. இளைஞர்களும் முதியோரும் நிம்மதியாக வாழமுடிகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து,பாடசாலைகளுக்கு கல்விக்கான இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை ஏறாவூர் மற்றும் உறுகாமம் பிரதேச பாடசாலைகளில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்வி அபிவிருத்தி என்பது மிக முக்கியமானதொன்றாகும். 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் கல்வி அபிவிருத்திக்காக முன்னுரிமை அளிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கல்வியினூடாகவே இந்த நாட்டில் அபிவிருத்தியையும் இன நல்லிணக்கத்தையும் கொண்டு வர முடியும் என்பதால் நல்லாட்சியின் நாயகர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள்.இது மகிழ்ச்சியளிக்கின்றது.
இன வாதமற்ற சிறந்த சமுதாயம் சிறந்த கல்வியினூடாகவே அடையப் பெற முடியும்.
கடந்த காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தில் ஒதுக்குப் புறக் கிராமங்கள் சேர்த்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால்தான் கிளர்ச்சிகள் தோன்றின.வன்முறைகள் தலைவிரித்தாடின. இளைஞர்கள் திசை திருப்பப்பட்டார்கள். இளைஞர்கள் சவால்களை எதிர்கொண்டார்கள்.
இன,மத பேதம் இல்லாத கல்வி இந்நாட்டுக்கு நிரந்தர அமைதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தித் தரும்.
இப்பொழுது உலகம் கல்வியால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பூகோளக் கிராமமாக மாறிவிட்டிருக்கின்றது. எனவே இத்தகைய அறிவார்ந்த யுகத்தில் இனப்பாகுபாடு காட்டுவது அர்த்தமற்றது.சிறந்த கல்வி சிறந்த மானிட அபிவிருத்தியைக் கொண்டு தரும் என்றார்.
ஏறாவூர் மீராகேணி பஷீர்சேகுதாவூத் வித்தியாலயம், உறுகாமம் சுபைர் ஹாஜியார் வித்தியாலயம் என்பனவற்றுக்கு கணினிகளும் அலிஸாஹிர் மௌலானா வித்தியாலயம், அல்ஜுப்ரியா வித்தியாலயம் என்பனவற்றுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான தளபாடங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல். மஹ்ரூப், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago