Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஜனாதிபதியின் ஏறாவூர் வருகையின்போது, ஏறாவூர் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படும். அதன்மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும் என தான் எதிர்பார்ப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெப்ரவரி 6ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவுள்ளார்.
வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 ஆறு தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளன.
இதில், ஒரு ஆடைத் தொழிற்சாலை, கைத்தறித் தொழிற்சாலைகள் இரண்டு என்பன பெப்ரவரி 6ஆம் திகதி ஏறாவூரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளன. இதன்மூலம் குறைந்தபட்சம் 3000 குடும்பங்கள் வேலைவாய்ப்பைப் பெறும்.
மேலும், ஏறாவூர்ப் பிரதேசத்தில் மேலும் மூன்று பாரிய சர்வதேச உற்பத்தித் தொழிற்சாலைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
'இனக்கலவரங்களின் பின்னர் ஏறாவூர் நகர பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் தொழிற்துறை, காணி மற்றும் நிருவாகப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள குறித்து ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்கு கொண்டு வரப்படும்.
இதேவேளை, ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் எதிர்நோக்கப்படும் இடப்பற்றாக்குறையும் ஜனாதிபதியை நேரடியாக அழைத்து வந்து, அவரது நேரடிக் கவனத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago