Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, தொப்பிகலப் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் தேக்குமரக் குற்றிகள் 42ஐ இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக வெட்டப்பட்ட இம்மரக்குற்றிகளை விற்பனை செய்யும் நோக்கில் கொண்டுசெல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தன என்பதுடன், இக்குற்றிகள் ஒவ்வொன்றும் 6 முதல் 14 அடி நீளமுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதியில் மரக்குற்றிகள் காணப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்று தேடுதல் நடத்தியபோது இம்மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025