2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தேசிய உணவு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தேசிய உணவு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என ஏறாவூர் நகர பெரும்பாக விவசாய போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் கமத்தொழில் வாரத்தினை முன்னிட்டு விவசாயத் திணைக்களத்தினால், ஏறாவூர் விவசாயப் போதனாசியர் பிரிவில் பழமரக் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமைஇடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பெண்களை நாற்றுமேடைகள் அமைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் 'பெண்கள் நாற்றுமேடைத் திட்டம்' ஏறாவூர் விவசாய பெரும்பாகப் பிரிவில் அமுலாக்கப்படுகிறது. அதேபோல வீட்டுத் தோட்டம், பழச் செய்கைத் திட்டம் என்பனவும் இடம்பெறுகின்றன.

இவையெல்லாம் பெண்களை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமுலாக்கப்படுகின்றன. பெண்களின் ஆற்றல், திறமைகள் அடுப்பங்கரையோடு மாத்திரம்  முடக்கப்பட்டு விடாமல் அது வீட்டினதும் நாட்டினதும் பொருளாதாரத்திற்கும் வலுச் சேர்க்க வேண்டும்.

சுய உற்பத்தி மூலம் தன்னிறைவு காண்பதற்கும் இரசாயனம் கலக்காத நஞ்சற்ற உணவுற்பத்தி மூலம் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் பெண்கள் விவசாயத் துறையில் அவசியம் ஈடுபடவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மகளிர் அணியின் ஆற்றல்கள் தேங்கிக் கிடக்கும் ஒன்றாக இல்லாமல் அது பொருளாதாரத்தினதும் ஒட்டு மொத்த அபிவிருத்தியினதும் முதுகெலும்பாக மாற வேண்டும்.

தரிசு நிலங்களை வளங்கொழிக்கும் நிலமாக மாற்றுவதில் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் மூலம், கூடிய வருமானம், சிறந்த போஷாக்கு, நல்ல இயற்கைச் சூழல், ஆரோக்கியமான வாழ்வு என்பன பிரதி பயன்களாகக் கிடைக்கின்றன' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X