Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரிவில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்படாத அபிவிருத்திகள் காரணமாக பல இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் உள்ளூராட்சி மாத நிகழ்வு திங்கட்கிழமை (03) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான நிகழ்வு, மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாநகர சபைப் பிரிவில்; கடந்த 30 வருட காலத்தில் சட்டங்கள் சரியாக அமுல்படுத்தப்படவில்லை. கடந்த காலத்தில் மாநகர கட்டளைச் சட்டங்களை மதித்து செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மட்டக்கள்பு மாநகர சபைப் பிரதேசத்துக்குள் பல கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறே, வீதிகள் முறையற்ற வகையில் நிரப்பப்பட்டுள்ளன.
சில காணிகளுக்கு சரியான உரிமைப்பத்திரங்கள்; இல்லை. சிலர் சர்ச்சைக்குரிய காணிகளில் வீடுகளையும் கட்டியுள்ளனர். சரியான உரிமைப்பத்திரங்கள்; இல்லாத காணிகளை அகற்றுவதற்கு உள்ளூராட்சிமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், மாநகர சபை அதனை மனிதாபிமான ரீதியிலேயே நோக்குகின்றது. சட்ட ரீதியாகப் பார்க்கவில்லை' என்றார்.
'கடந்த முறை உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டபோது சுகாதாரம், வருமானம் ஈட்டுதல், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கை ஏற்படுத்துதல் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இம்முறை இந்த நிகழ்வு வித்தியாசமான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'தொடர்ந்தேர்ச்சியான சேவை ஊடாக உற்பத்தித்திறன் மிக்க அபிவிருத்தி' என்ற தலைப்பில் இந்த உள்ளூராட்சி மாத நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.
பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும்போது, அடிப்படையில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சரியான தகவல்கள் மாநகர சபையில் இல்லாத நிலையே இருக்கின்றது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் 42 ஆயிரத்துக்கும்; மேற்பட்ட சொத்துகள் உள்ளன. ஆனால், 32 ஆயிரம் சொத்துகள் தொடர்பான பதிவுகளே உள்ளன. தகவல்கள் சரியாக இல்லாவிட்டால், பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் திருப்தி ஏற்படாத நிலையே இருக்கும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago