Suganthini Ratnam / 2016 ஜூன் 27 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துச் சின்னாபின்னாமாக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை படுவான் சமர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழ் மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருக்கின்றோம். ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் வெளியிலும் இருந்துகொண்டு கூட்டமைப்பை உடைத்துச் சின்னாபின்னாமாக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான நகர்வை இன்றிருக்கின்ற அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் நாட்டில் இருக்கின்ற ஒரு சில பேரினவாதிகளும் கட்சிதமாக செய்வதற்கு முயற்சிக்கின்றனர்;' என்றார்.
த.தே.கூ. பிளவுபடுமானால், நாம் அடைய முடியாததை இந்த அரசியல் பயணத்திலும்; பெற முடியாமல் போய்விடும்.
நாங்கள் அழிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள், ஒழிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள், காணாமல் செய்யப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம். மூன்று தசாப்தகால யுத்தத்தில் அனைத்தையும் இழந்துள்ளோம்' என்றார்.
'தற்போதைய அரசாங்கத்தைக் கொண்டுவந்ததில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும் காத்திரமான பங்களிப்பு உண்டு என்பதை எவரும்; மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
தற்பேதைய அரசாங்கம் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளது. மூன்று விடயங்களை முன்வைத்து அரசியலமைப்பு யாப்பை திருத்துவதற்கு முன்வந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், தேர்தல் முறையை மாற்றி அமைப்பது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவருவது போன்றவையாகும்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் த.தே.கூ.வின் தலைமைத்துவம் சிறந்த முறையில் பயணிக்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் வாக்குப் பலத்தால் 16 ஆசனங்களுடன் எதிர்க்கட்சி தலைமையையும் பெற்றுக்கொண்டுள்ள த.தே.கூ., அரசியலமைப்பு மாற்றத்தில் மக்களுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒற்றுமையாகச் செயற்படுகின்றது. இந்த வேளையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
'கொக்கட்டிச்சோலை ஒரு வர்த்தக நிலையமாக மக்களை கவர்ந்;தெடுக்கக்கூடிய தளமாக இன்னும் 10 வருடங்களுக்குள் பெரு நகரமாக வளரும்' என்றார்.
24 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
9 hours ago