Suganthini Ratnam / 2017 மே 11 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருகின்றனர் எனக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிததார்.
மட்டக்களப்பு பார் வீதியை அண்டி அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'கல்குடா சுற்றுலாப் பிரதேசம் என்பதுடன், அங்கு சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், இப்பிரதேசத்தில் எத்தனோல் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்போது, அது எத்தனோல் உற்பத்தி நிலையம் என்று எவருக்கும் தெரியாது. ஆனால், அது எத்தனோல் உற்பத்தி நிலையம் என்று தெரியவந்ததும், அதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துள்ளேன்.
இந்த எத்தனோல் உற்பத்தி நிலையம் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டுவந்து, அதன் நிர்மாணப்பணியை நிறுத்துவதற்காக வாழைச்சேனைப் பிரதேச அபிவிருத்திக் குழுவில் நான் தீர்மானம் நிறைவேற்றினேன்.
அத்துடன், இந்த நிலையத்தின் பாதிப்பைச் சுட்டிக்காட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 6 மாகாண சபை உறுப்பினர்களுமாக 12 பேர் கையொப்பம் இட்டு ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கியுள்ளேன்' என்றார்.
'போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் ஜனாதிபதி, இந்த எத்தனோல் உற்பத்தி நிலையம் இங்கு அமைக்கப்படுவதை ஏற்கின்றாரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அவருடைய பதிலுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியை வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில ஆதரவாளர்களுக்கு அத்தொழிற்சாலை அமைக்கப்படுவதில் சந்தோஷம் இருக்கும். இந்த நிலையத்துக்கு முஸ்லிம் சமூகமும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் -முஸ்லிம் உறவில் மிக உறுதியாக இருப்பவர். ஆகவே, இரண்டு சமூகங்களும் இணைந்து எதிர்க்கின்ற இந்த எத்தனோல் நிலையம் இங்கு இயங்குவதற்கு அவர் பூரண ஆதரவு வழங்கமாட்டார்' என்றார்.
18 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago