2025 மே 08, வியாழக்கிழமை

தீப்பிடித்து வயோதிபப் பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட மூதூர் கடற்கரைச்சேனை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் வல்லியாச்சி (வயது 90) என்பவர் தீப்பிடித்து உயிரிழந்துள்ளார்.

தனது கொட்டில் வீட்டில் தனிமையாக வசித்துவந்த இவர் புதன்கிழமை (02) இரவு மண்ணெண்னைய் விளக்கை வைத்துவிட்டு உறங்கிய வேளையில், அவ்விளக்கு தட்டுண்டு விழுந்துள்ளது. இதன்போது, தீப்பிடித்து எரிந்து எரிகாயங்களுக்குள்ளான அவரை மூதூர் வைத்தியசாலையில் அருகு வீட்டிலிருந்த மகள் அனுமதித்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X