2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'திருக்குறளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் உயர்வடையலாம்'

Kogilavani   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வழியில், அவர் கூறியுள்ள திருக்குறளைப் பின்பற்றி வாழ்வில் நடப்போமேயானால் நாம் வாழ்வில் உயர்வடையலாம். 1330 திருக்குறள்களும் எமக்குக் கிடைத்த பெரும் கொடையாகும். தற்போது இந்த திருக்குறள் தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலம், ஹிந்தி  போன்ற பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பலராலும் படிக்கப்பட்டு வருகின்றது. எனவே மாணவர்கள் அனைவரும் 1330 திருக்குள்களையும் மனனம் செய்ய வேண்டும்' என மட்.களுமுந்தன்வெளி சக்தி அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் வ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவரின் குருபூசைத்தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (06) மேற்படி அறநெறிப் பாடசாலையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,

'பொய்யாமொழி, பொதுமறை போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் திருக்குறளை இவ்வுலகுக்கு இரண்டு வரி வடிவங்களில் மிகவும் தெளிவாக எடுத்துத் தந்துள்ளார். மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து நல்வழிகளையும், 1330 குறள்களில் அவர் எடுத்துரைத்தள்ளார்.

பாடவிதானங்களிலும் திருக்குள் ஒரு பாடமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் திருக்குறள்களையும் அவற்றுக்குரிய பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது அண்டை நாடான இந்தியாவில் தரம், 2, 3 இல் கற்கும் மாணவர்கள் 1330 திருக்குளங்களையும் மனனம் செய்து அவ்றுக்குரிய பொருளையும் விளக்குகின்றார்கள். ஆனால் எமது பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் ஒரு அதிகாரத்திலுள்ள திருக்குறளைச் சொல்வதற்குத் தயங்குகின்றார்கள். இந்த நிலைமை மாற்றடை வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X