2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திராய்மடுவில் மீனவரின் சடலம் மீட்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு கிராமத்தில் கிணற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை மீனவரின் சடலமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.

திராய்மடு கிராமத்தைச் சேர்ந்த நேசதுரை பேணார்ட் (வயது 54) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில நாட்களாக நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்தள்ளது.

அவரது வீட்டுவளவிலுள்ள கிணற்றிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X