Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தொற்றா நோய்கள், உணவுப்பழக்க வழக்கங்களினாலேயே ஏற்படுகின்றன என விவசாய திணைக்களத்தின் காத்தான்குடி விவசாய போதனாசிரியர் திருமதி குந்தகை ரவிசங்கர் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மானிய அடிப்படையில் விவசாய உள்ளீடுகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புதிய காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்?
இன்றைய அவசர யுகத்தில் வாழும் நாம் எமது பாரம்பரியமான உணவுப்பழக்கத்திலிருந்து தவறி துரித உணவுகளை உள்ளெடுக்கும் வழக்கத்தினை இன்று கைகொள்வதனால் பல நோய்களுக்கு முகம் கொடுக்கின்றோம்.
பாரம்பரிய அரிசி உணவுகளை சுவையும் தரமும் மிக்கவகையாகத் தயாரித்தல் நகர் புறத்தில் நுகர்வோரின் போசனையை மேம்படுத்துவதுடன் பெண்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் சிறந்த தொழில் துறையாகும்.
இவ்வாறான பல வேலைத்திட்டங்களை விவசாய திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இராசாயணம் கலந்த பசளைகளை பாவிப்பதை நிறுத்தி இயற்கை பசளைகளை நமது விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இராசாயன பசளைகளை பாவிப்பதன் மூலம் பல தொற்றா நோய்களுக்கும் இன்று முகம் கொடுக்கின்றோம் என்றார்.
இதில், மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவிப்பணிப்பாளர் வி.லிங்கேஸ்வரராஜா, விவசாய பாடவிதான உத்தியோகத்தர்களான எம்.சலீம், திருமதி ஆர்.நவரூபன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, விவசாய திணைக்களத்தின் பெண்கள் விவசாய விரிவாக்கல் கழகத்தின் செயற்பாடுகளை வலுவூட்டும் முகமாக, பாரம்பரிய அரிசி உணவுகளின் வியாபார அறிமுகம் செய்யப்பட்டதுடன், மானிய அடிப்படையில் விவசாய உள்ளீடுகள் ஐம்பது பேருக்கு வழங்கப்பட்டன.
இதன் ஒவ்வொரு உள்ளீடும் 2,500 ரூபாய் பெறுமதியானதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago