2025 மே 07, புதன்கிழமை

'தொழில்நுட்பங்களை கையாளத் தெரியாதவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவர்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நவீன தொழில்நுட்பங்களை கையாளத் தெரியாதவர்கள் அரசாங்க சேவையில்; நுழைவதற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்களென மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட அனைத்து விடயங்களையும் டிஜிட்டல் படுத்தி அவற்றினூடாக பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் வகையிலான பயிற்சிநெறி மட்டக்களப்பு பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (24)  நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

உள்ளூராட்சிமன்றங்களில் தரவுகளை ஆவணப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தரவுகள் கோரப்படும் பட்சத்தில் அவற்றை  உடனடியாக வழங்குவதில் உத்தியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை இலகுபடுவத்துவதற்காகவும் நவீன தொழில்நுட்பத்தில் தரவுகளை சேகரிக்கவும் இந்தப் பயற்சி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சிமன்றங்கள் ஊடாக மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை இந்த தரவுப் பதிவுக்குள்  உட்படுத்தவுள்ளோம். இதன் மூலம் மக்கள் இலகுவில் தங்களது சேவைகளை பெறமுடியும். தரவுகள் சரியான முறையில் கிடைக்குமாயின்,  சிறந்த திட்டமிடல்களை மேற்கொள்ளமுடியுமென்பதுடன், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கமுடியுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X