Niroshini / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தொழில் மத்திய நிலையத்தை, அரசடி நூலகக் கட்டடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டேவிட் டலி இன்று வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் மாவட்ட செயலகத்துக்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடு இந்நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் தொழில் இணைப்பு பரிமாற்றங்கள், தொழில் சந்தையின் தகவல் வழங்குதல், தொழில் சந்தைக்கு தொழில் முயற்சியாளர்களை தயார் செய்தல், தொழில் பயிற்சிக்கு இளைஞர்களை சிபாரிசு செய்தல் மற்றும் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகளுக்கான அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரத்ன, சர்வதேச தொழில் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான பணிப்பாளர் டொங்லின் லீ, மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்ஜி.ஜி.ஜே. தர்மசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது,வடக்கு, கிழக்கில் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என இலங்கை மற்றும் மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டலி தெரிவித்தார்.



48 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
6 hours ago
22 Dec 2025