Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தாகத்துக்கு குடிக்கும் தண்ணீரை பாரபட்சம் காட்டி வழங்கக்கூடாதென ஏறாவூர் ஹிதாயத்நகர் தாறுஸ் ஸலாம் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஏ.எப்.நுஸ்லா மற்றும் பொருளாளர் ஏ.எம்.ஆமினார் தெரிவித்தனர்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்களிடம் கருத்தறியும் அமர்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 'இன ரீதியிலான பாகுபாடுகளால் நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது. இன ரீதியான பாரபட்சங்களை உடனடியாக இல்லாமல் செய்;ய வழி காண வேண்டும்' என்றார்.
'குடிநீர் வழங்குவதற்காக கிணறு அமைத்துக்கொடுக்கும்போது கூட, பாரபட்சமாக ஏன் சிந்திக்க வேண்டும். ஹிதாயத் நகர் கிராமத்துக்குப் பக்கத்திலுள்ள தமிழ் மக்கள் மஞ்சள் நிறமான தூய்மையற்ற தண்ணீரைப் பருகின்றார்கள். அவர்கள் தமிழ் மக்கள் என்று பாராமல் முஸ்லிம் எயிட் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்து நான் 10 கிணறுகளை அமைப்பதற்கு உதவியிருக்கின்றேன்.
தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ், முஸ்லிம் என்று பாகுபாடு காட்டி இயற்கை வளங்களைப் பிரிக்கக்கூடாது.
இந்த நாட்டில் வாழும் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிமோ எல்லோரும் ஒரே நீரையே பருகுகின்றோம், ஒரே காற்றையே சுவாசிக்கின்றோம், ஒரே இரத்தமே ஓடுகின்றது. ஒரே மண்ணில் வாழ்கின்றோம். அப்படியென்றால், ஏன் இந்தப் பாரபட்சம்?' எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
'மேலும், இந்த நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளைக் கட்டாயம் கற்பிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பரஸ்பர மத கலாசாரங்களை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும். எந்த இனமும் நாட்டின் எந்தப் பகுதியிலும் காணி வாங்கவோ, விற்கவோ, குடியிருந்து வாழவோ இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.
ஒரு இனத்துக்கான கிராமம், ஒரு இனத்துக்கான பாடசாலை, ஒரு இனத்துக்கான நிர்வாக அலுவலகம் என்ற முறைமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பதவி போன்ற பெண்களும் செய்யக்கூடிய தொழில்களுக்கு பெண்களுக்கு இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.' எனவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago