2025 மே 08, வியாழக்கிழமை

'தனித்தனியான முடிவுகளை எடுப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தனித்தனியான முடிவுகளை எடுப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எதிர்ப்பினை தெரிவிக்கவேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது என தெரிவித்த அவர்,எதிர்ப்பதற்கு அப்பால் குழுக்களின் பிரதிதலைவர் பதவியை துறந்து அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பினை காட்ட வேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது சலுகை அடிப்படையில் கிடைத்த பதவி அல்ல.அது நாடாளுமன்ற மரபு ரீதியாக கிடைத்துள்ளது.அதனை துறக்கவேண்டிய அவசியம் இல்லை.

காணாமல்போனோர் ஆணைக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கையில்லை. காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவானது கடந்த அரசாங்கத்தின் ஏமாற்று வேலையாகும்.அதனையே இன்றைய அரசாங்கமும் செய்துவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இன்று தமிழர்களுக்கு பலமான அமைப்பாகவுள்ளது. அதில் உள்ள கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X