Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தனியார் வகுப்புக்களில் பிள்ளைகளின் உரிமைகள் மீறப்படுகின்றன என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று (14) நடைபெற்ற சிறுவர் பரிசளிப்பு வைபவத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,
கட்டாயக் கல்வி என்பது மாத்திரம் சிறுவர்களின் உரிமையல்ல. மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டாயக் கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும்.மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி தொடர்பில் பெற்றோர் ஆய்வு செய்ய வேண்டும்.
பாடசாலைகளில் சகல விழாக்களும் நடைபெறுகின்றன.ஆனால், கல்வி கற்பதற்காக தனியார் வகுப்புக்களை நமது மாணவர்கள் நாடவேண்டியுள்ளது.
கல்வியின் தரம் பிரத்தியேக வகுப்புக்களில் உறுதி செய்யப்படுவதாக நினைக்கின்றார்கள். கல்வியின் தரத்தினை ஏன் பாடசாலைகளில் உறுதிப்படுத்த முடியாது. தனியார் வகுப்புக்களில் பிள்ளைகளின் உரிமைகள் மீறப்படுகின்றது.
புறகீர்த்தி செயற்பாடுகளில் பாடசாலைகள் ஆர்வம் காட்டினாலும் கல்வியின் தரத்தினை உறுதிப்படுத்தி கல்வியில் மாணவர்களை ஆர்வம் காட்டச் செய்ய வேண்டும்.
கட்டாயக் கல்வி என்பது பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போய் வருகின்ற விடயமல்ல. பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தி பெறுகின்ற தரமான புள்ளிகளைப் பெறுகின்ற கல்வியாக அந்தக் கல்வி இருக்க வேண்டும்.
இம்முறை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையைக் காட்டுகின்றது.பிள்ளைகளின் சொற்கள்,எண்ணங்கள்,சிந்தனைகள் வீடு என்றாலும் சரி பாடசாலை என்றாலும் சரி ஏனைய இடங்களில் என்றாலும் சரி அவையும் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
பாடசாலைகளில் அதிபர்களும் ஆசியர்களும் தீட்டும் திட்டங்களை மாணவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாணவர்களையும் அதில் பங்குதாரர்களாக சேர்த்து அவர்களையும் உள்ளடக்கும் போதுதான் அங்கு வினைத்திறனான சிறுவர் கல்வியை வழங்க முடியும்.
சிறுவர்களின் கருத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.சிறுவர் உரிமை பற்றி பேசுவது முக்கியமல்ல. சிறுவர் உரிமைகள் சரியாக அமுல்படுத்தப்படுகின்றாதா என்பதுதான் முக்கியமாகும்.
சிறுவர்களைப் பற்றி பேசும் நாம் சிறுவர்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். சிறுவர்களுக்கு தேவையானவை வழங்கப்பட வேண்டும்.சிறுவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்றார்.
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago