2025 மே 10, சனிக்கிழமை

'தமிழ் ஆசிரியர் சங்கத்தின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது'

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிசாம் மீது, இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்  பத்திரிகை மூலம் தெரிவித்த குற்றச்சாட்டானது கண்டனத்துக்குரியது என கல்குடா கல்வி வலய அதிபர்கள் சங்கத்தின் தலைவரும் சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபருமான எம்.தவராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக  அவர்  நேற்று(13)ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கிழக்குமாகாணத்தில் எத்தனை ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளார்கள். அவர்கள் எந்த வகையினர் என்பதை பல ஆண்டுகளாக ஆசிரியர் சங்கம் அறிந்ததில்லை. சரியான தகவல்களை பலத்த சிரமத்தின் மத்தியில் தந்தபெருமை தற்போதைய கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரையே சாரும்.

2015 வரை கூடுதலான ஆசிரியர்வளம். பௌதீகவளம் என்பவற்றை வழங்கியதோடு கஷ்டப் பிரதேசங்களுக்கு கூடியளவு விஜயம் செய்து தமிழ் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்த பெருமையும் இவரையே சாரும்.

இந்த அமைப்பு ஆசிரியர் நலன்சார்ந்த அல்லது மாணவர் நலன் தொடர்பாக இது வரை எதைச் செய்தார்கள் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

எனவே, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் நின்று மாகாண கல்விப் பணிப்பாளரின் சேவையை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X