Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் நிலையில், தங்களுக்குள் இருக்கின்ற கசப்பான உணர்வுகளை மறந்து தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு விடயத்தில் தற்போதுள்ள சந்தர்ப்பத்தை நழுவ விட்டால், இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு புதன்கிழமை (11) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,
'நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் கொண்டு வந்தபோது, தெற்கிலுள்ள பிரதான கட்சிகள் மாறி மாறி எதிர்த்து வந்தன. தற்போது அந்த இரண்டு கட்சிகளும்; இணைந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றன.
இதனைக் குழப்பும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணி முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் பணிகளுக்குக் கூட, அவர்கள் இடையூறாக இருக்கிறார்கள்' என்றார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து, எங்களுக்குள் இருக்கின்ற கசப்பான உணர்வுகளை மறந்து, ஒன்றிணைந்து அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து அரசாங்கத்தை நடத்தி வருவதால், ஆட்சிக் கவிழ்ப்பு என்பது இயலாத காரியமாகவே இருக்கும்' எனவும் அவர் கூறினார்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago