2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தமிழில் முறையிடுவதற்கும் விசாரிப்பதற்குமான வசதிகள் விஸ்தரிக்கப்படும்'

Thipaan   / 2016 நவம்பர் 01 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

'தமிழ் மொழியில் முறைப்பாடு செய்வதற்கும், தமிழில் விசாரணை செய்வதற்கும் பொலிஸ் நிலையங்களில் வசதிகள் செய்வதற்குமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவை மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளன' என, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

150ஆவது பொலிஸ் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில், இன்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில், 467 பொலிஸ்நிலையங்கள் உள்ளன. அவற்றை, 600ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு 70 வீதமான குற்றச் செயல்களை குறைப்பதே எமது இலக்காகும்.

பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு செயற்படும் வகையில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில் பொலிஸ் நடமாடும் காவலரண்கள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி, பொலிஸாரின் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த நடமாடும் பொலிஸ் காவலரண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. பொலிஸ் நிலையங்கள் கணணிமயப்படுத்தப்படவுள்ளன. பொலிஸாரின் சம்பளம் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதில் 17 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 23 சதவீதம் வழங்கப்படவுள்ளன.

நாட்டில், தேசிய பாதுகாப்;பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட்டுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட பொலிஸார் தமது கடமையினை சிறப்பாக செய்து வருகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X