2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'தமிழர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் முன்வரனும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கு இந்த  அரசாங்கம் முன்வர வேண்டும் எனக் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை  வழங்கப்பட  வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அன்னை பூபதியின் 29ஆவது வருட நினைவுதினம் மட்டக்களப்பு, நாவலடியிலுள்ள அவரது கல்லறையில் புதன்கிழமை (19) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட நாட்களில் பண்டா -செல்வா ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்ட நாளும் ஒன்றாகும். தமிழர்களின்; வரலாற்றில், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட நாட்களில் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியும் ஒன்றாகும்.

18.4.1958 அன்று தந்தை செல்வாவும் அப்போதைய பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்ட நாளாகும்.  

அதன் பின்னரே இந்த நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. தொடர்ந்து தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டார்கள்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .