Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 17 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
பல கசப்பான சம்பவங்களை தமிழர்கள் நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள். இச்சம்பவங்களை ஒருபோதும் மறந்துவிட முடியாது. இவ்வாறு பல வழிகளினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணி தொடர்ந்துகொண்டிருக்குமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
தைத்திருநாளையொட்டி சனிக்கிழமை (16) இரவு மத்திய முகாம் கிறீன்லைட் விளையாட்டுக்கழகம் கரப்பந்தாட்டப் போட்டி நடத்தியது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எமது மத்திய முகாம் பிரதேசம் மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்ட பிரதேசம். இதற்குக் காரணம் எங்களுடைய வலுவான ஒரு அரசியல் கட்டமைப்பு. இந்த அரசியல் கட்டமைப்பானது நீடித்தது நிலைக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் பல கசப்பான சம்பவங்களை கண்டவர்கள் அனுபவித்தவர்கள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago