2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தலைமைகள் விட்ட தவறுகளை த.தே.கூ. சுமக்கவேண்டியுள்ளது'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,கே.எல்.ரி.யுதாஜித்
 
'கடந்த காலத்தில் எமது தலைமைகள் விட்ட அனைத்துத் தவறுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது சுமக்க வேண்டியுள்ளது' இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு கன்னன்குடா புதுமண்டபத்தடி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்க பல்பொருள் விற்பனை நிலையத் திறப்பு விழா சனிக்கிழமை  (12) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அரச நிர்வாகத்தில் நாங்கள் பங்குகொள்ளாமல் விலகியிருந்தமைக்கான பலாபலன்களை இத்தனை காலமும் நாம் கண்டிருக்கிறோம். இவ்வாறு நாம் விலகியிருந்தமையால், எமது வளங்கள் மற்றையவர்களுக்கு பயன்படக்கூடிய விதத்தில் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறோம். இப்போது நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
 
இனிவரும் காலத்தில் அரச நிர்வாகத்தில் எமது தலையீடுகள் இல்லாமல் எந்தவொரு காரியமும் நடைபெறுவதற்கு இடம்கொடுக்கக்கூடாது. அவற்றை நாம் செய்விக்க வேண்டும். எமது பிரச்சினைகளை இலகுவாகக்; கையாள வேண்டும்' என்றார்.
 
'தற்போது நாம் மிகவும் பொறுப்புணர்வுடனும் கொள்கைப்பற்றுடனும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதனை எமது மக்களும் உணருவார்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.

'கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்பது தமிழர்களின் நிலத்தை சத்தமில்லாம் பிடுங்கிக் கொள்வதற்காக ஒரு சதி. இதனால், எமது மாவட்ட பிரதேச நிர்வாகங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X