Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டின் அபிவிருத்திக்கு அரசாங்கம் மாத்திரமல்ல தனியார் துறையினரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற பிரதேச தொழில் முயற்சியாளர் பேரவையின் அங்குரார்ப்பண வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
நாட்டின் அபிவிருத்திக்கு அரசாங்கம் மாத்திரமல்ல தனியார் துறையினரும் பங்களிப்பு செய்ய வேண்டும் அப்போது தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.
ஒரு காலத்தில் வறுமையில் இருந்த சீன நாடு இன்று பொருளாதார ரீதியாக சிறந்த நாடாக திகழ்கின்றது.
சீனா விசேட பொருளாதார மையங்களை நிறுவி தனது நாட்டை சிறந்த ஒரு பொருளாதார வளர்ச்சியுள்ள நாடாக மாற்றியுள்ளது.
இன்று உலகத்தில் கைத்தொழில் நாடாக சீன விளங்குகின்றது. அந்த நாட்டின் உட்கட்டமைப்புக்கு அங்குள்ள தனியார் துறையினரும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சீனா மற்றும் சிங்கப்பூர் இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து நமது நாடு படிப்பனைகளை பொருளாதார ரீதியாக பெறவேண்டியுள்ளது.
இலங்கையின் புள்ளி விபரங்களின் படி 937,736 பேர் சிறு தொழில் முயற்சியாளர்களாகவும் 71,126 பேர் தொழில் முயற்சியாளர்களாகவும் 10,405 பேர் நடுத்தர தொழில் முயற்சியாளர்களாகவும் 2,414 பேர் உயர் தொழில் முயற்சியாளர்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 பேரில் ஒருவர் சிறு தொழில் முயற்சியாளராக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
தொழில் முயற்சியாளர்கள் அரசாங்கத்துக்கு வரி செலுத்துவோர்களாக இருக்கின்றனர். அவர்களின் வரியில் அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பளம் பெறுகின்றனர். அதனால் தொழில் முயற்சியாளர்களை அரசாங்க உத்தியோத்தர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago