Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனை நியமிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஐக்கிய பேரவை மற்றும் மாவட்ட தமிழ் ஐக்கிய இளைஞர் ஒன்றியம் ஆகிய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் ஒன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடம் உள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
மட்டக்களப்பு,படுவான்கரை பிரதேசம் மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசமாகும். இங்கு வாழும் மக்களின் கல்வி,வாழ்வதாரம், சுகாதாரம் போன்றன விருத்தி செய்ய வேண்டும்.
அதே போன்று மட்டக்களப்பு மாவட்டம் 74 வீதம் தமிழர்களும் 26 வீதம் முஸ்லிம்களையும் கொண்டுள்ளதால் தமிழர் ஒருவருக்கே மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.
அந்தவகையில். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான விருப்பு வாக்குகள் பெற்றவர் என்ற வகையிலும் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவான கூடுதலான விருப்பு வாக்குகள் பெற்றவர் என்ற வகையிலும் சிறந்த ஒரு கல்வியலாளர் என்ற வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு இந்த பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago