2025 மே 12, திங்கட்கிழமை

'நிதி நிறுவனங்கள் மக்களை கடன் சுமைக்குள் தள்ளுகின்றன'

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நூற்றுக்கு மேற்பட்ட நிதி நிறுவனங்கள் அதிகூடிய வட்டிக்கு பணத்தை வழங்கி மக்களை கடன் சுமைக்குள் தள்ளி வருவதாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் மேலும் கூறுகையில்,

குடும்பங்களில் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இவ்வாறான வங்கிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பாராட்டுகின்றேன்.

இவ்வாறான சிறந்த திட்டங்களுக்கு பிரதேச செயலகம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X