2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

நீதிமன்றத்தை அவமதித்த  குற்றத்துக்காக 30 வயதுடைய ஒருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனையை  வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அப்துல் காதர் றிஸ்வான், இன்று வெள்ளிக்கிழமை (07) விதித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கஞ்சாவுடன் நேற்று வியாழக்கிழமை (06) கைதுசெய்த பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை (07) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்; அவரை ஆஜர்படுத்தியபோது அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து குறித்த நபர் நீதிமன்றத்தை அவமதித்ததுடன், அவரை பொலிஸார் கைது செய்து அதற்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த நபருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனையை நீதவான் விதித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X