2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘நீதியான விசாரணை வேண்டும்’

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

“இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து, நீதி விசாரணையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை  ஈடுபட்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும், "கால அவகாசம் வழங்க வேண்டாம்" என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்து, துண்டுப் பிரசுரமொன்றையும் விநியோகித்தனர்.

“எமது சொந்தங்கள், படையினரால் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களால் காணாமல் ஆக்கப்பட்டதுடன், பாலியல் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி இலங்கை அரசாங்கம், தன் கடப்பாடுகளை நிறைவேற்றுதவற்கான காலஅவகாசத்தை, கொஞ்சம் கூட நீட்டித்தராதீர்கள்.

"ஏற்கெனவே, காலமும் இடமும் தரப்பட்டது. ஆனால், இலங்கை அரசாங்கம், இந்த தீர்மானத்தைத் கண்டுகொள்ளவே இல்லை.

"கால அவகாசத்தைச் சிறிதளவேனும் நீடித்தாலும், அதன் விளைவாக பொறுப்புரைத்தலே இல்லாமற்போகும். மேலும், எங்களுக்கும் ஏனைய தமிழ் மக்களுக்கும், ஆபத்தே விளையும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .