2025 மே 08, வியாழக்கிழமை

'நான்கில் ஒரு பகுதியினர் மனநோயின் தாக்கத்துக்குட்பட்டுள்ளனர்'

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

உலகில் வாழும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் மனநோயின் தாக்கத்துக்குட்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சுசிலா பரமகுருநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்லடியில் உள்ள மேற்படி அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அனுஸ்டிக்கப்படும் தினங்களில் மிகச்சிறந்த தினமாக உளநல தினம் கருதப்படுகின்றது.உளநலத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தேடிச்சென்று உதவி வழங்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

நோயினால் பாதிக்கப்படும் ஒருவர் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைபெற்றுக்கொள்ளமுடியும்.ஆனால் உளநலத்தினால் பாதிக்கப்படுபவர்கள் அவ்வாறு சென்று சிகிச்சைகளைப்பெற்றுக்கொள்வதில்லை.அவ்வாறானவர்களை நாங்கள் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்க வேண்டும்.

இன்று சர்வதேச ரீதியில் இந்த உளநல தினம் முக்கியத்துவம் பெறுகின்றது.ஒரு சமூகத்தில் வளர்ந்தவர்கள் மத்தியில் நான்கில் ஒருவருக்கு உளநல பாதிப்பு உள்ளது.இதனை உலக சுகாதார ஸ்தாபனமும் உறுதிப்படுத்தியுள்ளது.நான்கில் ஒரு பகுதியினர் இவ்வாறு உளநலப்பாதிப்புகளை கொண்டுள்ளனர்.

இயற்கை மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 4.5மில்லியன் மக்கள் உளநல வைத்தியசாலைகளில் உளநல சிகிச்சைகளைப்பெற்று வருகின்றனர். அந்தவகையில் உளநல மேம்பாடு முக்கியமாக கருதப்படுகின்றது.

இன்று இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இடம்பெறும் குற்றச்செயல்களின் அடிப்படையை பார்க்கும்போது அதன் பின்னணியாகவுள்ளது அவர்களின் உளநல பாதிப்பாக இருக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X