2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Niroshini   / 2016 ஜூன் 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமசேவையாளர் பிரிவின் பூனையாண்டவாடி அணைக்கட்டு வாய்க்காலில் 12வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

உயிரிழந்த சிறுவன்  மாவடிமுன்மாரி கிராமசேவையாளர் பிரிவின் வண்டியாமடு பகுதியைச் சேர்ந்த  கனகராஜன் ஜிவிதன் என தெரியவந்துள்ளர்.

தனது வீட்டிலிருந்து 300மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பூனையாண்டவாடி அணைக்கட்டு வாய்க்காலில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்

உயிரிழந்த சிறுவனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X