2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாவற்குடாவில் சிறுவன் அடித்துக் கொலை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடாப் பிரதேசத்தில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி, நாவற்குடா மாதர் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அச்சிறுவனின் வளர்ப்புத் தாயை இன்று (15) காலை கைதுசெய்துள்ளதாகப்  பொலிஸார் கூறினர்.

மேலும், அச்சிறுவனை அடித்ததாகக் கூறப்படும் அவனது வளர்ப்புத் தாயே (வயது 50) ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அச்சிறுவனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இருப்பினும், அச்சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாருக்கு வைத்தியசாலை அதிகாரிகள் தகவல் வழங்கினர்.

இதனை அடுத்து, குறித்த வளர்ப்புத் தாய் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, சம்பவ இடத்துக்குச் சென்று பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து பொல்லுகள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுவனின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தலை மற்றும் முகத்தில் அடி காயங்கள் காணப்படுவதாக பொலிஸாரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப்  பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடவியல் பிரிவுப் பொலிஸாரும் இணைந்து  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .