Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்ட கிராம மக்களின் நன்மை கருதி பாலமொன்று அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு அங்கத்தவருமான ஜி.சிறிநேசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அப்பகுதியில் பாலம் இல்லாததால் பிரதேசவாசிகள் போக்குவரத்துச் செய்ய அனுபவிக்கும் சிரமங்களை தான் நேரில் சென்று பார்வையிட்டேன்.மேலும், நரிப்புல் தோட்ட பாலம் அமைய வேண்டிய இடத்தையும் பார்வையிட்டேன்.
அண்மையில் தனது நாடாளுமன்ற உரையிலும் நரிப்புல் தோட்ட மக்களுக்கு பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பிரஸ்தாபித்திருந்தேன்.
வெகு விரைவில் இதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025