2025 மே 09, வெள்ளிக்கிழமை

'நல்லாட்சியின் அனுகூலங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லாட்சியின் அனுகூலங்கள் கிடைக்க வேண்டுமென  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 90 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேயம் மக்கள் மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (03 மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அதிகாரங்களும் சேவைகளும் பெரும்பான்மைச் சமூகத்துக்கோ அல்லது குறிப்பிட்ட சாராருக்கோ இருக்கக்கூடாது. இந்த நாட்டில் நகரப்புறங்களிலும்; கிராமப் புறங்களிலும் வாழ்கின்ற அனைத்து  இன மக்களும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் ஒரே கண்ணோட்டத்தில் நோக்கப்பட வேண்டுமென்பதற்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து நாம் பாடுபடுகின்றோம்.

'கடந்த ஆயுத வன்முறைக் காலத்தில் இழப்புக்களைச் சந்தித்து கஷ்டப்பட்டுப் போன நாட்டு மக்கள் அனைவருக்கும் இன, மத, பிரதேச மொழி வேறுபாடுகள் காட்டாமல் சேவையாற்றவே நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இது நாட்டு மக்களுக்கு நிறைவும் நிம்மதியும் தரக் கூடிய காலகட்டமாகும்.' என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X