2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'நல்லாட்சியில் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 28 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லையென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'இந்த நாட்டிலுள்ள மூவினச் சமூகங்களும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்கின்றது. இந்த நல்லாட்சியில் எங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த நல்லாட்சிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் சமூகமும் பாரிய பங்களிப்புச் செய்தது. ஆனால், முஸ்லிம் சமூகத்தின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலுள்ளன. விசேடமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் எல்லை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. அவ்வாறே கிரான் பிரதேச செயலக எல்லையும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நல்லாட்சியில் நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைகளை நல்லாட்சி ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை தீர்;க்காவிட்டால், சந்தேகத்துக்கும் தப்பான அபிப்பிராயங்களுக்கும் இட்டுச்செல்லும். அதற்கு இடமளியாமல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X