2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

20 பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2016 மே 17 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் கோட்டம், கோறளைப்பற்று மேற்கு கோட்டம் ஆகியவற்றிலுள்ள 20 பாடசாலைகளுக்கு மொத்தமாக 37 கணினிகள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சரின் செயலகம், நேற்று(17) வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் இவ்வருட மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஏறாவூர் கோட்டத்திலுள்ள 9 பாடசாலைகளுக்கு 15 கணினிகளும் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திலுள்ள 11 பாடசாலைகளுக்கு 22 கணினிகளும் வழங்கப்படவுள்ளன.

இதன்படி ஏறாவூர் கோட்டத்திலுள்ள அல்- ஜுப்ரியா வித்தியாலயத்துக்கு - 4 கணினிகளும் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் -3, பஷீர் சேகுதாவூத் வித்தியாலயம் -2, ஏறாவூர் அமீரலி வித்தியாலயம், றூகம் சுபைர் ஹாஜியார் வித்தியாலயம், ஐயன்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம், டாக்டர் அஹ்மத் பரீட் வித்தியாலயம், றூகம் அல் அமான் வித்தியாலம், அல் அஷ்ரப் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு தலா ஒன்று என்ற அடிப்படையிலும்  கணினிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதேவேளை, கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திலுள்ள  ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயம் -3, பாத்திமா பாலிகா வித்தியாலயம், மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயம்  ஆகியவற்றுக்கு தலா 3 கணினிகளும் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம்,  கேணி நகர் மதீனா வித்தியாலயம், ஹைராத் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு தலா 2 கணினிகளும் பாலக்காட்டுவெட்டை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம், ஓட்டமாவடி சாஹிரா வித்தியாலயம், காகித நகர் மில்லத் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹ்மத் ஹிராஸ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு தலா ஒரு கணினியும் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X