Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 31 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் போதான தேர்தல் நியமன நடவடிக்கைகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டுமென்பதை அரசாங்கம் நிபந்தனையாக்க வேண்டுமெனக் கோரி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மும்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய சூறா சபையிடம் இம்மும்மொழிவை இன்று ஞாயிற்றுக்கிழமை முன்வைத்துள்ளதுடன், தேசிய அரசியல் யாப்புச் சபையிடமும் இம்மும்மொழிவை முன்வைக்கவுள்ளதாக பெண்களுக்கான வவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் தீர்ப்புகளிலும் வாக்களித்தல், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களுக்கு ஆண்களைப் போலவே பெண்களும் தகைமையுடயவராக இருத்தல் வேண்டுமென்பதுடன், அதனை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது பெண்கள் போட்டியிட்டு குறைந்த வாக்குகளைப் பெற்றாலும், கோட்டா முறை மூலம் பெண்களுக்கு வாய்ப்பளித்து தெரிவு செய்வதற்கான முறைமையினை அரசு சட்டமாக்க வேண்டும்.
தேசியப் பட்டியலுக்காக முன்கூட்டியே கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் பெயர்ப்பட்டியலில் பெண்களி;ன் பெயர்கள் கட்டாயம் இருக்க வேண்டுமென்பதையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் தேசியப்பட்டியலிலிருந்து மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
சமூக ரீதியாக பெண்களி;ன் அரசியல் பிரவேசம் மிகக் குறைவாக இருப்பதால் பெண்களின் பங்களிப்பு சட்டம் இயற்றும் இடங்களிலும் தீர்மானம் எடுக்கும் உயர் குழுக்களிலும் இல்லாமையினால் பெண்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமையினால் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு பெண்கள் உள்வாங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
அரசின் அனைத்து மட்டங்களிலும் பகிரங்க பதவிகளை வகித்தலிலும் எல்லாப் பகிரங்க பணிகளை புரிதலிலும் பெண்கள் ஓரங்காட்டப்படாமல் சம வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதை இல்லாமலாக்கி அதி உச்ச தண்டனையை காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக கடைப்பிடிக்க சந்தர்ப்பம் அளிப்பதுடன் காழி நீதிபதிகளை அரசு தெரிவு செய்து அவர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். குடும்ப வன்முறைகளினால் அல்லது வல்லுறவு சம்பவத்தினால் பாதி;க்கப்படும் பெண்களுக்கான காப்பகங்கள் அரசினால் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட ரீதியாக பெண்களுக்கான தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு பெண்கள் தொடர்பான சிவில் வழக்குகளை கையாள அங்கீகாரம் அளி;க்கப்படல் வேண்டும். பெண்கள் தொடர்பான ஆடைகள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்தல் அரசின் கடமையாதல் வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago