Suganthini Ratnam / 2017 ஜனவரி 11 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
எதிர்வரும் தேர்தல் காலத்தில் மட்டக்களப்பில்; பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
மேற்படி கட்சியினுடைய மகளிர் அணியின் மத்திய குழுக் கூட்டம், வாவிக்கரை வீதியிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்றது.
எதிர்காலத்தில் நடைபெறும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'தமிழ் மக்கள் துன்ப நிலைமையில் காணப்படுவதுடன், தமிழ்ப் பெண்கள் அனைத்து வழிகளினாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
'பெண்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதையும் அவர்களைக் கூட்டங்களுக்கு அழைப்பதையுமே தற்போது அரசியல்வாதிகள் செய்ய முற்படுகின்றனர். அவர்களுக்கான உதவிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.
இந்த நாட்டில் தமிழர்கள் உரிமைக்காக போராடியபோது, அதற்குப் பெண்களும் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். ஆனால், இன்றைய தமிழர்களின் அரசியலில் பெண்களின் பங்கு தொடர்பில் கேள்வியெழுப்பும் நிலைமையில் உள்ளோம்.
பெண்களாகிய நாம்; சிந்திக்க வேண்டும். எமக்கான அபிவிருத்திகளை, எமக்கான உரிமைகளை நாம் பெற வேண்டும். அவ்வாறாயின், பெண்கள் அரசியலுக்குள் நுழைய வேண்டும். பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கும் கட்சிகளுக்கு நாம்; வாக்களிக்க வேண்டும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாக இருந்தால், அக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளில் பெண்களுக்கான தனியான அமைப்பை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சி மட்டுமே கொண்டுள்ளது. பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் கூடிய அக்கறையுடன் எமது கட்சி செயற்படுகின்றது' என்றார்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago