Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
'பெண்கள் வெறுமனே பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை. அவர்கள் வினைத்திறன் மிக்கவர்கள், நேர்த்தியான சமூக கட்டமைப்பை உறுவாக்குவதில் முன்நிற்பவர்கள்' என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் சட்டத்தரணி அமீர்அலி தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சும் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகமும் புதன்கிழமை மாலை (27) இணைந்து நடத்திய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரம் மற்றும் விசேட தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஒரு மனிதனின் திறமையான செயற்பாட்டுக்கும் உற்சாகமான நடவடிக்கைகளுக்கும் தேக ஆரோக்கியம் இன்றியமையாததாகும். எனவே ஆண்,பெண் இருபாலருக்கும் தேக ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு உடற்பயிற்சியும் விளையாட்டுக்களும் உதவிபுரிகின்றன, விளையாட்டுக்கள் நமது உடம்பை சோர்ந்து விடாமல் பாதுகாக்கின்றன. நாம் புத்துணர்வுடன் செயலாற்றவும் அது உதவி செய்கிறது.
பெண்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து அவர்களை வெறும் பிள்ளைப்பெறும் இயந்திரங்களாக பார்த்த காலம் மலை ஏறிவிட்டன, இன்று அவர்கள்தான் பல துறைகளில் முன்னணியில் திகழ்கின்றார்கள்.
அவர்களை இன்னும் வீரியம் உள்ளவர்களாகவும் விவேகமுள்ளவர்களாகவும் உருவாக்கும் ஒரு கடப்பாடு நம்மிடம் உள்ளது. பெண்களையும் இந்த விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற விடயங்களில் பங்குபற்ற ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago