Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
கடந்தகால யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினையும் கல்வியினையும் முன்னெடுக்கும் நோக்குடன் சுவீஸ் உதயம் அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவது தமிழர்களுக்கு கிடைத்த அரும் பாக்கியமாகும் என சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட கணேசா வித்தியாலயத்துக்கு போட்டோப்பிரதி இயந்திரத்துக்கான ரோணர் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் பொன்.பாரதிதாசன் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
கடந்தகால யுத்தத்தின்போது பிரபல்யமான பல பாடசாலைகள் இருந்த இடமும் இல்லாது அழிக்கப்பட்டது. அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையின் போதும் பல பாடசாலைகள் அழிந்துபோன நிலையில் இன்று சுவீஸ் உதயம் போன்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருவது தமிழர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
ஓர் இனத்தின் முன்னேற்றத்துக்கும் அந்த இனத்தின் அடையாளத்தினை நிலைநிறுத்தவும் கல்வி அந்த இனத்துக்கு முக்கியமானது. அக்கல்வியினை நிலைநிறுத்தி பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
இந்தப் பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். ஆனால், இன்று அதிபர் பாரதிதாசனின் முயற்சியின் பலனாக இப்பாடசாலையில் பல்வேறு பௌதிக வளங்கள் நிறைந்து காணப்படுகிறன.
இதுபோன்று, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக விழிப்புடன் இருந்து செயற்பட வேண்டும் அப்போதுதான் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்படையும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
1 hours ago