Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கடந்த தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அரசியல் சார்பற்ற சுயாதீனமான இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் என்ற நிலைமாறி அரசியல் சாயம் பூசப்பட்டு பேரம் பேசும் சக்தி இழக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேற்படி சங்கத்தின் நிருவாகத்தினர், நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் அங்கத்துவம் பெறும், ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமானது பாரம்பரிய வரலாற்றினைக் கொண்ட சங்கமாகும். இச்சங்கம் மிக நீண்ட காலமாக அரசியல் சார்பற்ற அமைப்பாக இயங்கியதால் சங்கம் சார்பான பல பிரச்சினைகளை வென்றெடுக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக இந்நிலைமாறியுள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் கடந் நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்டிருந்தார் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கு தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் உரிமையுண்டு தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிடுவதனை எவரும் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாது ஆனால் ஒரு சங்கத்தில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுவதாயின் அதற்கான விதிமுறையுண்டு, சங்கத்திடமிருந்து அனுதியை பெற்றிருக்க வேண்டும்.
பின்னர்தான் சங்கத்தின் பெயரினை பாவித்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தன்னிச்சையாக தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பெயரை பாவித்தமை தொடர்பில் ஆசிரியர்கள் ஏனைய ஆட்சிமன்ற உறுப்பினரிடமும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கான தகுந்த பதில் சங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்களிடமிருந்து கிடைக்காத கரணத்தினால் இந்த கோரிக்கையினை வெளியிடுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் போட்டியிட்டு சென்று விடுவார்கள். எதிர்காலத்தில் சங்கத்துக்கு ஏற்படக் கூடிய இழப்புக்களை, களங்கங்களை எதிர் கொள்கின்றவர்கள் ஆசிரியர்களே. எமது தொழில் புனிதமானது நாங்கள் அனைவரிடமும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமே தவிர எவரிடமும் தலை குனியக்கூடாது.
எனவே இவ் விடயம் தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின், ஆட்சி மன்றத்தினைக் கூட்டி இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் இருந்து விலகநேரிடும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராசா கூறுகையில்,
இவ்விடயம் தொடர்பில் சங்கத்தில் அங்கத்துவம்பெறும், ஆசிரியர்களும், ஆட்சிமன்ற உறுப்பினர்களும், தமக்கு பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் சங்கத்திலிருந்து கொண்டே பொதுச்செயலாளர் போட்டியிட்டிருந்தார். இது சங்கத்தின் விதிகளுக்கு முரணானதாகும்.
இவ்விடயம் தொடர்பில் பொதுச்செயலாளரிடம் தாம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தொடர்ந்து சங்கத்தின் ஆட்சி மன்ற உறுப்பினர்களைக் கூட்டி இவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவெடுக்கும் வரை சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுச்செயலாளருக்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago