2025 மே 09, வெள்ளிக்கிழமை

'போதைப்பொருள் பாவனையினால் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் நோய்த்  தாக்கத்தினால் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் எமது  நாட்டில் மரணடைவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் தெரிவித்தார்.

சமூதாய அடிப்படை அமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பான செயலமர்வு, காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது நாட்டில் தற்போது அதிகமான உயிரிழப்புகள் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படுகின்றன. போதைப்பொருள் பாவனை, புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்றவை குடும்பங்களை வறுமை நிலைக்கு இட்டு;ச் செல்கின்றது. புகைத்தல், மதுபானம், போதைப்பொருள் ஆகியவற்றுக்காக செலவிடும் பணத்தை ஒருவர் சேமிப்பராயின், அவரது குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சி ஏற்படும். வறுமை இல்லாமல் போகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X