Thipaan / 2017 ஜனவரி 15 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது பஸ் தரிப்பு நிலையத்தினை ஆரையம்பதியில் மீண்டும் அமைக்க வேண்டும் என, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரால், சனிக்கிழமை (14) அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
'கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் மூலம் பயணிகளின் போக்குவரத்து சேவையினை இலகுபடுத்துவதற்காகவும் பதிவுகளை மேற்கொள்வது, போக்குவரத்தினை முகாமை செய்வதற்கும் என பிரதேச ரீதியாக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன.
அதன் அடிப்படையில், ஆரையம்பதியிலும் பஸ் நிலையம் அமைப்பதற்கு 2012 இல் தீர்மானிக்கப்பட்டு, அதற்கென ஆரையம்பதியில் சிறு கைத்தொழில் திணைக்கள பயிற்சி நிலையத்துக்;கான காணியில் சுமார் 50 பேர்ச் காணி பிரதேசசபைக்கு மாகாண அமைச்சரவை தீர்மானத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சரால், 2014ஆம், 2015ஆம் ஆண்டுகளுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறித்த பொது பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை.
எனவே, ஆரையம்பதியில் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கென குறித்தொதுக்கப்பட்ட காணியில் பொது பஸ் நிலையம் அமைப்பதற்கு, 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், ஆவன செய்து தரும்படி கேட்டுக்கொள்கின்றேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago