Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாண கல்வி அதிகாரி, பின்தங்கியுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு வளங்களை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மட்ட மூன்றாம் தரத்துக்குரிய ஆங்கில கவிதை போட்டியில் முதலிடத்தைப் பெற்ற இலுப்படிச்சேனை அப்பாள் வித்தியாலய மாணவி செல்வி ஜெயானந்தன் ஸதுர்திகாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
வித்தியாலய அதிபர் ம.ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 'கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் எவ்வித ஒழுங்கும் இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வேலை வாய்ப்புக்களை வழங்கி எமது பிரதேசங்களுக்கு நிரப்பி மீண்டும் அவர்களின் பிரதேசங்களுக்கு இடமாற்றும் வேலைகளை மேற்கொண்டு தமிழ் பகுதிகளை வெற்றிடமாக வைத்துக்கொள்ளுமளவிற்கு ஆட்சி நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிறந்த நிர்வாகியாகவே இருக்கிறார். அவரை அரசியல்வாதிகளாக மாறுமாறு எங்களது மாகாணசபை உறுப்பினர்கள்கூட கூறிக்கொண்டிருகிறார்கள். ஆனால் கல்வியமைச்சர் வேறொரு திட்டத்தை வைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்;.
மாகாண கல்வி அதிகாரி கீழ் நிலையில் உள்ள தமிழ்ப்; பிரதேசங்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை கட்டடங்களை கட்டுகின்ற விடயங்களை பொறியியலாளரிடம் விட்டுவிடுங்கள். அவர் அரசியல் பலத்தோடு இருப்பதனால் கல்வி தொடர்பான அதிகாரி கல்வி பற்றி மாத்திரம் சிந்திக்க வேண்டும.; கட்டடங்கள் தொடர்பாக பொறியியலாளர்கள் பாரத்துக்கொள்வார்கள் என அவரைத் திருத்தியெடுப்பது இலகுவான காரியமல்ல. இவற்றை சமாளித்துக்கொண்டு கல்வியில் முன்னேற்றம் காணவேண்டும்.
பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக பல பாடசாலைகள் அமைதியாகச் சொல்கிறார்கள். ஆனால் சில பாடசாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது பொடர்பாக நாங்கள் எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
கடந்த காலத்தில் பல இடர்பாடுகளினால் எமது பிரதேசங்கள் கல்வியில் பின்தள்ளிக்காணப்பட்டன. இந்த நிலை இனிமேல் தொடரக்கூடாது. வருங்கால சந்ததியினரை கல்விமான்களாக உருவாக்க வேண்டும்.
நாங்கள் பல இழப்புக்களைச் சந்தித்ததன் காரணமாக சும்மா இருந்தவர்கள் எல்லாம் சனத்தொகையில் எமக்கு முன்னாள் வரப்பார்க்கிறார்கள். அனைத்து விடயத்திலும் உச்சத்தில் இருந்த எமது இனம் தற்போது என்ன நிலையில் உள்ளது என இதயபூர்வமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது பிள்ளைகளை ஒவ்வொன்றையும் சிறந்த கல்விமான்களாக உருவாக்க வேண்டும். இது எங்கள் முன்னே இருக்கின்ற மிகப்பொரிய சவாலாகக் காணப்படுகிறது' என்றும் அவர் கூறினார்

1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago