Suganthini Ratnam / 2016 மே 12 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்காக உதவுவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மகிழ்ச்சி அடைகின்றது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மாவடிவேம்புப் பிரதேசத்திலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பெண்களுக்கான பல்தேவை தொழில்வழிப் பயிற்சிக்கூட நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அங்கு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'வாழ்க்கைப்படித் தரத்தின் கீழ் மட்டத்திலுள்ள பெண்கள் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சிகளைப் பெற்று, தங்களின் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைவதற்கு நாம் உதவக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்' என்றார்.
'இந்த நிலையத்தில் தைய்யல், பிரம்புக் கைத்தொழில், அணிகலன்கள், பின்னல் வேலை உள்ளிட்ட இன்னோரன்ன கைப்பணிப்பொருள் உற்பத்திகளில் ஈடுபடுவதன் மூலம் சிறந்த பயனைப் பெற்று வாழ்க்கைத்தர நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த பயிற்சிக்கூடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக நிதி உதவியை வழங்கியுள்ளோம். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதும், உங்களுக்கு இங்கு பயிற்சி பெற முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் 64 இலட்சம் ரூபாய் நிதி உதவியுடன் நவீன வசதிகள் கொண்டதாகவும் ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் தொழிற்பயிற்சி பெறும் வகையிலும் இந்தப் பயிற்சிக்கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago