Niroshini / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியினரிடம், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இதுவரை 1,155 பேர் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளதாக அச்செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுச் செயலாளர் ஏ.காண்டீபன் தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, வாகரை, பட்டிப்பளை மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேச செயலகங்களில் இடம்பெற்றது.
இந்த ஆலோசனைகளிலும் கருத்துக்களிலும் அதிகமானவை காணாமல் போனோர் சம்பந்தப்பட்ட விடயங்களாகவும் அடுத்தபடியாக காணிகள் சம்பந்தப்பட்டதாகவும் மூன்றாவது அதிகப்படியான கருத்துக்களாக இனப்படுகொலை பற்றிய விவகாரங்களாகவும் இருந்ததாக காண்டீபன் மேலும் தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியினரிடம் கருத்துக்களை முன்வைத்தோர் விபரம் வருமாறு:
திகதி பிரதேசம் விபரம் தெரிவித்தோர் எண்ணிக்கை
09 வாழைச்சேனை 278
12 களுவாஞ்சிக்குடி 77
13 மட்டக்களப்பு 209
16 வாகரை 90
18 பட்டிப்பளை 235
24 ஏறாவூர் 366
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago