2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

56 பேருக்கு செயற்கைக் கால்கள்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் விபத்துகளினால் கால்களை இழந்த 56 பேருக்கு 50,000 ரூபாய் முதல் 150,000 ரூபாய் பெறுமதியான செயற்கைக் கால்கள் சனிக்கிழமை (25) வழங்கப்பட்டதாக இந்தியாவின் சேலம் பாண்டிச்சேரி றொட்டரிக்கழகத் தலைவர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

இந்தியாவின் சேலம் பாண்டிச்சேரி றொட்டரிக்கழகத்தின் அனுரணையுடன்; மட்டக்களப்பு ஹரிட்ரேஜ் றொட்டரிக்கழகம் இந்த செயற்கைக் கால்களை வழங்கின.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மட்டக்களப்பு ஹரிட்ரேஜ் றோட்டரிக்கழகத் தலைவருமான எஸ்.கிரிதரன் தலைமையில் மட்டக்களப்பு வின்சண்ட மகளிர் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் செயற்கைக் கால்களைப் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வாரம் வடமாகாணத்தில் அவையவங்களை இழந்த 565 பேருக்கு செயற்கை அவையவங்கள் பொருத்தப்பட்டதாக இந்திய சேலம் பாண்டிச்சேரி றோட்டரிக்கழகத்தின் தலைவர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X