Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 29 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இவ்வருடத்தின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் 820 பேருக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வும் 300 முதல் 350 பேர் வரையில் இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு சட்ட உத்தியோகஸ்தர் மிருதினி சிறிஷ்குமார், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமுதாய சீர்திருத்தத் திணைக்கள அலுவலர்கள், மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கச் சேவை அலுவலர்களுக்காக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், நீதிமன்ற முறைமைகள், ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி இவ்வருடம்; 06 செயலமர்வுகள் நடத்தப்பட்டன. இதில்; 250 அரசாங்க அலுவலர்கள் பயனடைந்தனர்.
பொதுவான விடயங்களுடன் சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள் உள்ளிட்ட விடயதானங்களை உள்ளடக்கி 04 விழிப்புணர்வுச் செயலமர்வுகள் பாடசாலை மட்டத்தில் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் 120 மாணவர்கள் பயனடைந்தனர்.
இதேவேளை, இம்மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பொதுமக்களுக்கு நடத்தப்பட்ட சட்டம் பற்றிய கருத்தரங்குகளின் மூலம் 450 பேர் விழிப்புணர்வூட்டப்பட்டனர்.
மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளும் மீறப்பட்ட சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய பரிகாரங்கள், குடும்பப் பிணக்குகளுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்கக்கூடிய நிவாரணங்கள், நீதிமன்ற முறைமைகள், ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வூட்டப்பட்டன.
மேலும் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், தாபரிப்பு உள்ளிட்டவை தொடர்பிலும்; இலவச சட்ட ஆலோசனைகளை சட்ட உதவி ஆணைக்குழு வழங்குகின்றது. 15,000 ரூபாய்க்கு கீழ் மாதாந்த வருமானம் பெறுகின்ற மற்றும் சமூர்த்தித்திட்டப் பயனாளிகளுக்கு இந்த இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதில் 300 முதல் 350 பேர் வரையில் இலவச சட்ட ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.
நாட்டுப் பிரஜைகளில் எவரேனும் சட்டத்தையும் அது வழங்குகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தெரியாமலிருப்பது அவருக்கு பாதுகாப்பு இல்லாதுடன், பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் இலவச சட்ட ஆலோசனைகளைப் பெற விரும்புவோர் மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத்தொகுதியிலுள்ள அலுவலகத்தில் உதவிகளைப் பெறமுடியுமெனவும் அவர் கூறினார். இம்மாவட்டத்தில் 'எமது சமூகத்துக்கான சட்டமும் நீதியும்' எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் சட்ட உதவி நடமாடும் சேவையும் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago