2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

58 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்.

டெங்கு நோயினால் 3 மாதங்களில், 58 பேர் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்ஹான் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பகுதியில், 2017 ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் 23ம் திகதி வரை 58  பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோறளைப்பற்று, வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, செம்மண்ஓடை ஆகிய பகுதிகளிலேயே, டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை  அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஆதலால் குறித்த நோயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகம், கோறளைப்பற்று பிரதேச சபை என்பவற்றுடன் இணைந்து, வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், 7,800 வீடுகளில் 3,850 வீடுகள் மீது பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 180 வீட்டு உரிமையாளர்கள், டெங்கு நுளம்பு பரவும் வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X