2025 மே 07, புதன்கிழமை

'போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கவும்'

Niroshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,வி.சுகிர்தகுமார் 
 

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் வெள்ளிக்கிழமை(13) நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் என்பவற்று தமிழ் மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
 
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அண்மைக்காலமாக அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அவை எதுவும் நடைபெறாத நிலையே இருந்துவருகின்றன.

இந்த நிலையில்,இந்த சிறைக் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட,கிழக்கில் பல்வேறு போராட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
 
இதன் ஒரு கட்டமாக நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் முன்னெடுப்பதற்கு கூட்டமைப்பு தயாராகிவருகின்றது.
 
அத்துடன்,  வெள்ளிக்கிழமை சாத்வீக போராட்டத்தின் ஒரு கட்டமாக ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இவர்கள் விடுதலை செய்யப்படும் வரையிலும் இந்த போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலமாக இருக்கவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X